Welcome to my blog :)

rss

Monday, February 25, 2008

டாடா ஸ்கை - ஒரு குழப்பம்

செயற்கை கோள் தொலை காட்சி சந்தையில் புது வரவு - டாடா ஸ்கை. ( உங்களின் உரிமையை பறிக்கும் சர்வாதிகாரி )

சென்ற வாரம் டாடா ஸ்கை வாங்கிய நான் , நேற்று அதை திருப்பி கொடுத்து விட்டு முழு பணத்தையும் திரும்ப பெற்றேன். இதோ என் கதை . நான் டாடா ஸ்கை வாங்கியது முதல் நான் கற்ற அனுபவங்களின் தொகுப்பு இந்த பதிவு .
நான் டிஷ் டிவியை விட்டுவிட்டு டாடா ஸ்கையை தேர்தெடுத்ததற்கு அதன் மிதமிஞ்சிய விமர்சனமே காரணம். டிவியின் இயக்குதலை பொறுத்தவரையில் இது உண்மையே. டிவியின் முழு பயன்பாட்டையும் பெறுவது மிக சுலபம். டிஷ் டிவியை ஒப்பிடும்போது டாடா ஸ்கை மிக எளிதாக வடிவமைக்க பட்டுள்ளது .

பின்னர் நான் ஏன் அதை திருப்பி குடுத்தேன். ? . அதன் மோசமான, அடிப்படை சரி இல்லாத, முறை கேடான வறைமுறைகளே காரணம் . டிவியை பார்ப்பது மட்டும் போதும் என்பவர்களுக்கு டாடா ஸ்கை மிக பொருத்தம். ஆனால் நிங்கள் சரி எது ? தவறு எது ? என்று பிரித்தறிய தெரியாத முட்டாளாக இருக்க விருப்ப படாதவரானால் , உங்கள் உரிமைகளை விட்டுக்குடுக்காதவரானால்.... டாடா ஸ்கை உங்களுக்கானதல்ல.............

முன்று முக்கிய குறைகள் .........



வன்பொருள் உரிமம் : என் பணம் எதற்காக?

  • டிஷ் உங்களுடையது அல்ல ..... டாடாவினுடையது

ஆமாம் , டாடா இதை விளம்பரப்படுத்தவில்லை, உங்கள் விற்பனையாளரும் இதை உங்களுக்கு சொல்ல மாட்டார். நீங்கள் இணைப்பை துண்டிக்கும் போது டாடா, டிஷ் யை திரும்ப எடுத்துக்கொள்ளும் .


  • செட் டாப் பாக்ஸ் மட்டுமே உங்களுக்கு சொந்தம்.

ஆனால் டிஷ் இல்லாமல் செட் டாப் பாக்ஸ் பயன் படாது. செட் டாப் பாக்ஸ் க்கு மட்டுமே உங்களுக்கு ரசீது வழங்கப்படும் . டிஷ்யை டாடா வின் சர்வீஸ் மென் கொண்டு வருவார்.

  • உண்மையாக, இன்று நிங்கள் டாடா ஸ்கையை நிறுத்தினால்

அவர்கள் உங்களிடம் உள்ள டாடா ஸ்கை சம்மந்த பட்ட எல்லா வன் பொருட்களையும் எடுத்து கொண்டு சென்றுவிடுவார்கள். டாடா ஸ்கை சட்ட திட்டங்களும் இதை தான் சொல்கின்றன.


என் உரிமை எங்கே ?

  • டாடா ஸ்கை உங்கள் ரசனைகளை பதிவு செய்கிறது

ஆம் , நீங்கள் எப்போது ? எவ்வளவு நேரம் ? எந்த நிகழ்ச்சிகளை ? பார்க்கிறீர்கள் . உங்கள் ரசனை என்ன ? என்பதை நமக்கு தெரிவிக்காமல் பதிவு செய்கிறார்கள்.

Thursday, February 21, 2008

தற்கொலை

வாழ துணிவில்லாமல்

துணிந்து எடுக்கும் முடிவு....

அழுகை.....

திருகுவதால் அழுகின்றதோ

தண்ணீர் குழாய் .....

தன் கொள்ளி தன் கையில்....


நான் இல்லயேல் உனக்கு இடம் இல்லை


ஊர்ந்து செல்லும் , உறவுகளை சேர்க்கும் ......