Welcome to my blog :)

rss

Saturday, June 5, 2010

இனி, மின்மினி எபிசொட் 4

கோவை

மின்மினி முதல் விநாடியில் அதிர்ந்து, இரண்டாவது விநாடியில் வியர்த்து, மூன்றாவது விநாடியில் இருதயத்தின் மையத்தில் நொறுங்கிப் போனாள். ரத்தம் சூடாகி, மூளை தகித்தது.
'என்ன சொன்னார்?', 'ராங் நம்பரா?', 'பேசியது அவர்தானா... இல்லை, வேறு யாராவதா?'
பெல்லாரி மல்லய்யா மின்மினியின் முகமாற் றத்தைக் கவனித்துவிட்டுக் கேட்டார்... ''என்னம்மா, ஏன் ஒரு மாதிரியாயிட்டே?''
''அ... அ... அது... ஒண்ணுமில்லீங்கய்யா. நம்பர் தப்பாப் போட்டுட்டேன் போலிருக்கு.''
''நீ ரொம்பவும் டென்ஷனாத் தெரியறே! பார்த்து டயல் பண்ணும்மா!''
மின்மினியின் உதடுகள் ஈரம் இல்லாமல் பேப்பர்தாளாக உலர்ந்துபோய் இருக்க, லேசான கை நடுக் கத்தோடு அதே எண்களை மறுபடியும் செல்போனில் ஒற்றி எடுத்தாள். மறுமுனையில் ரிங்டோன் போயிற்று. தொடர்ந்து பங்கஜ்குமாரின் குரல்... ''சொல்லு மின்மினி!''
''ஒரு நிமிஷம்'' என்றவள், மல்லய்யாவைப் பார்த்து, ''உள்ளேயிருந்து பேசினா சரியா டவர் எடுக்கலை. சிட் அவுட் பக்கமாகப் போய் பேசிட்டு வந்துடறேன்யா!''
''சரிம்மா!''
மின்மினி ஹாலைக் கடந்து, தோட்டத்துப் பக்கம் இருந்த சிட்-அவுட்டை நோக்கிப் போனாள். உதட்டுக்கு செல்போனைக் கொடுத்தாள். குரலைச் சற்றே உயர்த்தி, ''என்னங்க...''
''சொல்லு...''
''ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி உங்களுக்கு நான் போன் பண்ணிப் பேசினபோது எதுக்காக 'ராங் நம்பர்'னு சொன்னீங்க?''
''மின்மினி! நான் இப்போ ஒரு முக்கியமான மீட் டிங்கில் இருக்கேன். ஒரு விவகாரமான பிரச்னை யைப் பத்திப் பேசிட்டு இருக்கும்போதுதான் உன்னோட போன் வந்தது. பட், டிஸ்ப்ளேயில் உன் பேர் வரலை. நீ பேசினதும் சரியாக் கேட்கலை. அதான், 'ராங் நம்பர்'னு சொல்லிட்டேன்.''
''இதுதான் உண்மைன்னா நான் நம்பறேன்.''
''சரி! சாயந்திரம் வந்து எல்லாத்தையும் பேசிக் கலாம். நான் இப்போ மீட்டிங்கை விட்டு வெளியே வந்து பேசிட்டு இருக்கேன். நான் மறுபடியும் உள்ளே போகணும்!''
''என்னது... சாயந்திரம் வர்றீங்களா?''
''ஆமா.''
''மத்தியானம் லஞ்ச்சுக்கு வர்றதா சொல்லி இருந்தீங்களே?''
''ஸாரி மின்மினி! இன்னிக்கு லஞ்ச்சுக்கு வர முடியும்னு எனக்குத் தோணலை. மீட்டிங் முடிய ரொம்ப நேரமாகும்னு நினைக்கிறேன்.''
''ரொம்ப நேரம்னா எவ்வளவு?''
''எப்படியும் மூணு மணியாயிடும்.''
''கலெக்டர் சார்! இன்னிக்கு நீங்களும் சரி இல்லை... உங்க பேச்சும் சரியில்லை. என்னாச்சு உங்களுக்கு?''
''பிரச்னை அப்படி!''
''அப்படி என்ன பெரிய பிரச்னை?''
''சொன்னா உனக்குப் புரியாது!''
''சரி! இன்னிக்கு நம்ம வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வந்திருக்கார். உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கார். யாருன்னு கெஸ் பண்ணுங்க பார்க்க லாம்.''
''அதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை. நீயே சொல்லிடு.''
''இன்னிக்கு நீங்க சுத்தமா அவுட் ஆஃப் ஆர்டர்! 'நீயா பேசுவது... என் அன்பே, நீயா பேசுவது'ன்னு ஹை பிட்ச்ல கத்திப் பாடணும் போலிருக்கு.''
பங்கஜ்குமாரின் குரல் உயர்ந்தது... ''இதோ பார் மின்மினி! உன்னோடு அரட்டையடிச்சுட்டு இருக்க இது நேரம் கிடையாது. நம்ம வீட்டுக்கு வந்திருக்கிற கெஸ்ட் யாரு?''
கணவரின் குரலில் கடுமை கலந்து ஒலித்ததை அறிந்ததும், மின்மினி சீரியஸானாள். சொன் னாள்... ''என்னோட குருநாதர் பெல்லாரி மல்லய்யா.''
மறுமுனையில் சிறு மௌன இடைவெளிக்குப் பின்பு... ''எப்ப வந்தார்?''
''அவர் வந்ததுக்கான சந்தோஷம் உங்க குரல்ல மிஸ்ஸிங்! எப்ப வந்தார்னு நீங்க கேக்கி றது ஏன் வந்தார்னு கேக்கிற மாதிரி இருக்கு.''
''நான் எது பேசினாலும் உனக்குத் தப்பாப் படுது! நானே அவரைப் பார்க்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன்.''
''ந...ம்...ப... முடியவில்லை... இல்லை..!''
''நிஜமாத்தான்!''
''அப்படின்னா லஞ்ச்சுக்கு வாங்க.''
''அது முடியாது. அவர் பக்கத்துல இருக் காரா?''
''நான் சிட்-அவுட்ல இருக்கேன். அவர் ஹால்ல ஏதோ புக் படிச்சிட்டு இருக் கார்.''
''நான் பேசணும். செல்போனை அவர்கிட்ட குடு.''
''இப்பத்தான் நீங்க கொஞ்சம் இளகி, திருநெல்வேலி அல்வா பதத்துக்கு வந்திருக் கீங்க...''- சொன்ன மின்மினி, வேகவேகமாக ஹாலை நோக்கிப் போனாள். சோபாவுக்குச் சாய்ந்து புத்தகத்தைப் புரட்டிக்கொண்டு இருந்த மல்லய்யா நிமிர்ந்தார்.
''என்னம்மா?''
''மாப்பிள்ளை உங்ககிட்டே பேசணு மாம்.''
''ரொம்ப சந்தோஷம்!'' - சொன்ன மல்லய்யா, செல்போனை வாங்கி, வலது காதுக்கு ஏற்றினார்.
''வணக்கம் மாப்பிள்ளை!''
''நான் உங்களுக்குப் பதில் வணக்கம் சொல்லக்கூடிய மன நிலையில் இல்லை!''
''மா...ப்...பி...ள்...ளை..?!''
''நான் என்ன தப்பு பண்ணினேன்னு எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுத்திருக்கீங்க?''
பெல்லாரி மல்லய்யாவின் கையில் இருந்த செல்போன் உயிருள்ள ஜந்து போல் நடுங்கியது!
நியூயார்க்
தன் முதுகில் யாரோ கை வைத்த உணர்வில், திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான் விஜேஷ். கன்றுக் குட்டி சைஸில், அட்டைக்கரி நிறத்தில், அந்தக் கறுப்பு நிற நாய் மூச்சிரைத்தபடி இரண்டு கால்களையும் தூக்கியபடி நின்றிருந்தது.
விஜேஷ் சர்வாங்கமும் அதிர்ந்துபோனவனாக ஒரு சின்ன அலறலோடு பின்வாங்க, முன்னால் போய்க்கொண்டு இருந்த ஃப்ளோரா திரும்பிப் பார்த்தாள். அவள் இதழ்க் கோடியில் சட்டென்று ஒரு புன்னகை பிறந்தது.
''ஹாய் ப்ளாக்கி! கம் ஹியர். அவர் நம்ம கெஸ்ட். இப்படி எல்லாம் பின்னாடி ஓடி வந்து தொட்டுப் பயமுறுத்தக் கூடாது.''
ப்ளாக்கி ஒரு துள்ளலோடு அவளை நோக்கித் தாவியது. ஃப்ளோராவின் இரண்டு தோள்களின் மீதும் கால்களைப் பதித்து வைத்துக்கொண்டு, அவளுடைய கன்னங்களை நாக்கால் ஒற்றியது. ''யூ... நாட்டி பாய்!'' என்று அதன் முதுகில் ஒரு அடி போட்டுவிட்டு, விஜேஷை ஏறிட்டாள் ஃப்ளோரா.
''மிஸ்டர் விஜேஷ்! இது இந்த வீட்டு ஓனரின் நாய். பெயர் ப்ளாக்கி. இந்த வீட்டை அவர்கள் காலி செய்துகொண்டு போகும்போது இங்கேயே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். இது இங்கேயே சுற்றிக்கொண்டு, கிடைத்ததைத் தின்றுவிட்டு, ராத்திரி வேளைகளில் இங்கே வந்து படுத்துக்கொள்ளும். நல்ல அறிவுள்ள நாய். அதற்குப் பிடிக்காதவர்கள் யாராவது இந்த வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் உறுமும்... குரைக் கும். ஆனால், உங்களைப் பார்த்து உறுமவில்லை; குரைக்கவில்லை. ஸோ, ப்ளாக்கிக்கு உங்களைப் பிடித்துவிட்டது என்று அர்த்தம்!''
ப்ளாக்கி இப்போது ஃப்ளோராவை விட்டு விட்டு, விஜேஷைச் சுற்றிச் சுற்றி வந்து முகர்ந்தது. அவன் மேல் தாவியது.
''ப்ளாக்கி! டோன்ட் டிஸ்டர்ப். கோ அண்ட் லை தேர்!'' - ஃப்ளோரா அதட்ட... அது காதுகளை மடித்து, வாலைச் சுருட்டிக்கொண்டு வாசற்படிக்கு அருகே இருந்த குரோட்டன்ஸ் தொட்டிக்குப் பக்கத்தில் போய்ச் சுருண்டு படுத்தது.
வீடு ஒரு வேண்டாத நிசப்தத்தில் உறைந்து கிடந்தது. அடித்த காற்றில் குளிர் ஊசி முனை களாக மாறி, உடலின் சதையைத் துளைத்து எலும்பைப் பதம் பார்த்தது. ஃப்ளோரா தன் கையில் இருந்த சாவியை உபயோகப்படுத்தி, மேக்னடிக் லாக்கரைத் திறந்தாள். கதவு வெண்ணெய்க் கட்டியில் இறங்கிய கத்தி போல் மெள்ளப் பின் வாங்க... உள்ளே வீடு சாம்பல் நிற இருட்டில் இருந்தது.
ஃப்ளோரா உள்ளே போய் சுவரில் இருந்த சுவிட்ச்களைத் தேய்க்க... சுவர்களில் ஒளிந்து இருந்த ஷேடோ பல்புகள் மின்சாரம் சாப்பிட்டு உயிர்பெற்றன.
வீடு அவ்வளவு சுத்தமாக இல்லை. தூசி மண்டிய ஃபர்னிச்சர்கள் அடைசலாகத் தெரிய, இரண்டு வெள்ளை எலிகள் விஜேஷ், ஃப்ளோ ராவின் அதிரடி வருகையால் பயந்து போய் தலைதெறிக்க ஓடாமல், 'யார்றா நீங்க?' என்பது போல் சிவப்பான சின்னக் கண்களால் பார்த் தன.
ஃப்ளோரா சொன்னாள்... ''மிஸ்டர் விஜேஷ்! இப்போதைக்கு வீடு பார்க்க இப்படித்தான் இருக்கும். நீங்கள் ஓ.கே. சொல்லி அக்ரிமென்ட் போட்டுவிட்டால், இரண்டே நாட்களில் வீட்டைச் சுத்தப்படுத்தி பெயின்ட்டிங் வேலை பார்த்துவிடலாம். முதலில் உங்களுக்கு இந்த வீடு பிடிக்கவேண்டும்.''
''வீடு ரொம்பவும் பழையதாக இருக்கும் போலிருக்கிறதே! அங்கே பாருங்கள்... பெயின்ட் நார் நாராக உரிந்து தொங்குவதை!''
''வீடு பழையதுதான்... ஆனால், உறுதியானது. நியூயார்க்கின் சிவில் கன்ஸ்ட்ரக்ஷன் டிபார்ட் மென்ட் இந்தக் கட்டடத்தின் உறுதியைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, இன்னும் 75 ஆண்டுகளுக்குத் தாக்குப்பிடிக்கும் என்று தரச் சான்றிதழ் கொடுத்து உள்ளது. இந்த வீட்டின் பேரன்ட்டல் டாக்குமென்ட்ஸை உங்களிடம் நான் காட்டும்போது, அந்தத் தரச் சான்றிதழையும் நீங்கள் பார்க்கலாம்...''- ஃப்ளோரா பேசிக் கொண்டே அந்த அறையைக் கடந்து உள்ளே போக, விஜேஷ் பின்தொடர்ந்தான்.
தூசி நெடியோடு மூன்று அறைகள் பார்வைக் குக் கிடைத்தன. ''அது கிச்சன். இது மாஸ்டர் பெட் ரூம். இது ரீடிங் ரூம்.''
ரீடிங் ரூமை எட்டிப் பார்த்தான் விஜேஷ்.உடைந்துபோன கண்ணாடி ஷெல்ஃபில் தாறுமாறாக அடுக்கப்பட்ட புத்தகங்கள். ஷெல்ஃபுக்கு மேலே இருந்த சுவரில் வரிசையாக மூன்று போட்டோக்கள் நூலாம்படைகளுக்குப் பின்னால் தெரிந்தன. விஜேஷ் அந்த போட்டோக்களைப் பார்த்துவிட்டு ஃப்ளோராவைப் பார்க்க, அவள் சொன்னாள்...
''முதல் போட்டோவில் இருப்பது இந்த வீட்டின் உரிமையாளர். பெயர் ஆல்பர்ட்ஸன். கே.எஸ்.சி. எனப்படும் கென்னடி விண்வெளி மையத்தில் புரொகிராம் இன்ஜினீயராகப் பணிபுரிந்து ரிட்டை யரானவர். பிறகு, ஒரு ஸ்பேஸ்க்ராஃப்ட் கல்லூரியில் விரிவுரையாளராக இரண்டு வருட காலம் பணி புரிந்தார். பிறகு, பார்வையில் குறை ஏற்பட்டதால், அந்த வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு, வீட்டில் ஓய்வாக இருக்க ஆரம்பித்தார். இரண்டா வது போட்டோவில் இருப்பது அவருடைய மனைவி. பெயர் எமிலி. ஹவுஸ் ஒய்ஃப். இருதய நோயாளி. இந்த 55 வயதுக்குள் இரண்டு தடவை பைபாஸ் சர்ஜரி செய்துகொண்டவர். மூன்றாவது போட்டோவில் இருப்பது அவர்களுடைய மகள். பெயர் சில்வியா.''
விஜேஷ் அந்த போட்டோக்களைப் பார்த்துவிட்டு, ஃப்ளோராவை ஒரு புன்னகையோடு பார்த்தான். ''நான் ஒரு கேள்வி கேட்டால், நீங்கள் தப்பாக நினைத்துக்கொள்ள மாட்டீர்களே, ஃப்ளோரா?''
''நீங்கள் தப்பான கேள்வியைக் கேட்டாலும்கூட நான் தப்பாக நினைத்துக்கொள்ள மாட்டேன். கேளுங்கள்.''
''போட்டோக்களில் ஆல்பர்ட்ஸனும் அவருடைய மனைவி எமிலியும் அழகான தோற்றத்தோடுகாணப் படுகிறார்கள். ஆனால், அவர்களுடைய மகள் அழகாக இல்லை. சற்றே தூக்கலான பல் வரிசையும், மேடிட்ட நெற்றியும், சிறிய கண்களும் அவளை ஒரு சராசரி அழகுக்கும் கீழே கொண்டுபோய் விட்டதே?''
''உண்மைதான்! ஆனால் சில்வியா, தான் அழ காக இல்லையே என்று ஒருநாள்கூட வருத்தப்பட்டது கிடையாது. என்னதான் படித்தாலும், பெரிய பெரிய கம்பெனிகளில் தனக்கு வேலை கிடைக்காது என்பதைப் புரிந்துகொண்ட சில்வியா, ஆண்கள் படிக்க விரும்பும் படிப்பான ஆட்டோமொபைல் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட படிப்பைப் படித்து, முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து 'AAA' என்ற அமைப்பில் வேலைக்கும் சேர்ந்துவிட்டாள்.''
''அது என்ன கிகிகி?''
''அமெரிக்கன் ஆட்டோமொபைல் அசோஸி யேஷன். அமெரிக்காவில் கார் வைத்திருப்பவர் களுக்குப் பயணத்தின்போது தேவைப்படும் அவசர உதவிகளைச் செய்வதற்காகவே சில கம்பெனிகள் செயல்படுகின்றன. அப்படிப்பட்ட கம்பெனிகளில் ஒன்றுதான் கிகிகி. வழியில் பெட்ரோல் தீர்ந்துவிட் டால், டயர் பஞ்சர் ஆகிவிட்டால், கார் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால், ஜஸ்ட் ஒரு போன்கால் போதும்... உடனே ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார்கள். சில்வியா ஒரு நல்ல கார் மெக்கானிக். பழுதுபட்ட காரை ஒரு சில நிமிடங்களில் சரி செய்துவிடு வாள்.''
விஜேஷ், சில்வியாவின் போட்டோவை மறுபடி யும் பார்த்துவிட்டு ஃப்ளோராவிடம் திரும்பிய வன்,
''இப்போது சில்வியா எனக்குப் பேரழகியாகத் தெரிகிறாள். அவளை நேரில் பார்க்க வேண்டும் என்கிற ஆசையும் மனசுக்குள்ளிருந்து லேசாக எட்டிப் பார்க்கிறது.''
''அந்த ஆசையின் தலை மேல் ஒரு தட்டுத் தட்டி அடக்கிவையுங்கள். அவளை நீங்கள் பார்க்க முடி யாது.''
''ஏன்?''
''பார்க்கும்படியான நிலைமையில் அவள் இல்லை.''
''எனக்குப் புரியவில்லை.''
''விட மாட்டீர்களே! அவள் இப்போது இருப்பது நியூஜெர்ஸியில் இருக்கும் மனநல மருத்துவ மனையில்.''
''ம... மனநல மருத்துவமனையா..?''
''யெஸ்...''''என்னாயிற்று?''
''டாக்டர்களுக்கே இன்னமும் பிடிபடவில்லை. அவளைக் குணப்படுத்த பெரிய தொகையைச் செலவழிக்க வேண்டியிருக்கும் என்று டாக்டர்கள் சொன்னதால்தான் ஆல்பர்ட்ஸனும் எமிலியும் இந்த வீட்டை விற்கவேண்டிய நிலைமைக்கு வந்துள்ளனர். இந்த வீட்டை நீங்கள் வாங்கிக் கொண்டால், அது அவர்களுக்கு ஒரு பெரிய உதவியாக இருக்கும்.''
விஜேஷ் திகைத்துக்கொண்டு இருக்கும்போதே... அவனுடைய செல்போன் அழைத்தது. எடுத்து காதுக்கு ஒற்றினான்... ''யெஸ்!''
''ப்ளீஸ்! மறுபடியும் சொல்றேன், அந்த வீட்டை வாங்காதீங்க!''-
மறுமுனையில் காமாட்சியின் குரல்!

Wednesday, April 14, 2010

இனி, மின்மினி Episode 3

நியூயார்க்

செல்போனில் தன் குரலின் டெசிபலை உயர்த்தினான் விஜேஷ்... ''இதோ பார்... ஒரு டெலிபோன் பூத்துக்குள்ளே புகுந்துக்கிட்டு நீ சொல்ற கதையைஎல்லாம் நம்ப நான் தயாரா இல்லை. விதி சிரிச்சா என்ன... அழுதா என்ன? நான் இப்போ அந்த வீட்டுக்குப் பக்கத்துலதான் இருக்கேன். இன்னும் சில நிமிஷங்கள்ல அந்த வீட்டைப் பார்க்கப்போறேன். வீடு பிடிச்சிருந்தா, உடனே அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமென்ட் போட்டுடுவேன்!''

விஜேஷ் சொல்லச் சொல்ல, அந்தப் பெண் மறுமுனையில் கெஞ்சினாள்... ''ப்ளீஸ் விஜேஷ்! நான் சொல்றதைக் கேளுங்க. உங்களுக்கு நியூயார்க்கில் ஒரு வீடு வேணும், அவ்வளவுதானே? நான் ஏற்பாடு பண்றேன். ஹட்சன் நதிக்கரையில் எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் வீட்டை விக்கிறதாச் சொல்லிட்டுஇருந்தார். நான் கேட்டுப் பார்க்கிறேன்.''

''என்னது! ஹட்சன் நதிக்கரையில் வீடு விலைக்கு வருதா?''

''ஆமா...''

''அந்த ஏரியாவில் வீடு வாங்கணும்னா, கையில குறைந்தபட்சம் பத்து லட்சம் டாலராவது இருக்கணுமே?''

''கண்டிப்பா...''


''அம்மா தாயே, ஆளை விடு! என் கையில் இருக்கிறது ரெண்டு லட்சம் டாலர்தான்! பத்துக்கு நான் எங்கே போவேன்?''

''நியூயார்க்கில் ரெண்டு லட்சம் டாலருக்கெல்லாம் வீடு கிடைக்கிறது ரொம்பவும் கஷ்டம். மூணு பெட்ரூம் கொண்ட ஒரு வீட்டை நீங்க வாங்கணும்னா, உங்க கையில் குறைஞ்சபட்சம் அஞ்சு லட்சம் டாலராவது வேணும், விஜேஷ்!''

''எனக்கு அதெல்லாம் தெரியாது. லாயர் ஃப்ளோரா ரெண்டு லட்சம் டாலருக்குள்ளே இப்பப் பார்க்கப்போற வீட்டை முடிச்சுத் தர்றதா சொல்லி இருக்காங்க. அது பழைய காலத்து வீடு. இருந்தாலும் பரவாயில்லை. கொஞ்சம் கொஞ்சமா ரெனவேஷன் பண்ணிக்கலாம்.''

மறுமுனையில் அந்தப் பெண் பதற்றமானாள்... ''விஜேஷ்! அந்த வீட்டை வாங்காதீங்க. அது வீடு இல்லை.''

''பின்னே?''

''விபரீதம்!''

விஜேஷ் சிரித்தான். ''கடந்த ஆறு மாத காலத்துல அந்த வீட்டை வாங்க முயற்சி பண்ணி அக்ரிமென்ட் போட்ட ரெண்டு பேர் அடுத்தடுத்து இறந்துபோயிட்டாங்க; உங்களுக்கும் அந்த நிலைமை வரலாம்னு சொல்லப்போறே... அதுதானே விபரீதம்?''

''ம்...''

''இதோ பார்... நீ சொல்ற அந்த விபரீதத்தைப்பத்தி நான் ஃப்ளோராகிட்டே பேசிட்டேன்.''

''அதுக்கு என்ன சொன்னா?''

''அக்ரிமென்ட் போட்ட அந்த ரெண்டு பேருமே எழுபது வயசுக்கு மேற்பட்டவங்க. தவிர, அவங்க ஹார்ட் பேஷன்ட்ஸ். ஒரு பெண்; ஒரு ஆண். பெண் பிரிட்டனி ஜான்சன். அதிக நடைப் பயிற்சி காரணமா மாஸிவ் அட்டாக் ஏற்பட்டு மரணம். ஆண் ஜான் கரோல். ஒவ்வொரு சனிக்கிழமை ராத்திரியும் ஓவராக் குடிப்பார். பைபாஸ் சர்ஜரி பண்ணின அந்த ஹார்ட் தாங்குமா? மண்டையைப் போட்டுட்டார். ஸோ, அந்த ரெண்டு பேரோட மரணங்களுக்கும் வீடு காரணம் இல்லை. தங்களுடைய ஹெல்த்தைப் பாதுகாக்கத் தவறியதுதான் காரணம். அக்ரிமென்ட் போடாம இருந்திருந்தாக்கூட, அந்த ரெண்டு பேரும் செத்துப்போயிருப்பாங்க...''

''விஜேஷ்! உங்களுக்கு ஒரு முக்கியமான உண்மை புரியலை!''

''என்ன உண்மை?''

''அந்த ரெண்டு பேரும் வயசானவங்க, ஹார்ட் பேஷன்ட்ஸ்னு சொன்னதெல்லாம் உண்மை. ஆனா, அந்த ரெண்டு பேரோட மரணம் இயற்கையானது அல்ல.''

''அப்புறம்?''

''மர்டர்ஸ்...''

''இப்படி ஏதாவது ஒண்ணைச் சொல்லி பயமுறுத்தி, என்னை அந்த வீட்டை வாங்கவிடாம பண்றதுதானே உன்னோட நோக்கம்.''

''இல்லை! உங்க உயிரைக் காப்பாத்தறதுதான் என் நோக்கம்.''

''அப்படின்னா, என் முன்னாடி வந்து நில்லு. அந்த ரெண்டு பேரும் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களைக் காட்டு. அவை நம்புற மாதிரி இருந்தா, போலீசுக்குப் போவோம்.''

''போலீசுக்குப் போக முடியாது விஜேஷ்.''

''ஏன்?''

''அதுல ஒரு பிரச்னை இருக்கு.''

''என்ன பிரச்னை?''

''அதை வெளியில் சொல்ல முடியாது.''

''என்ன நீ, நான் எதைக் கேட்டாலும் நெகட்டிவ்வாவே பதில் சொல்லிட்டு இருக்கே? அந்த ரெண்டு பேரும் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உன்னிடம் இருந்தா, போலீசுக்குப் போக வேண்டியது தானே?''

''இது நம்ம ஊர் போலீஸ் இல்லை. நியூயார்க் போலீஸ். சட்டம் இங்கே நாணல் மாதிரி வளைந்து கொடுக்காது. இரும்புத் தூண் மாதிரி நிக்கும்.''

''உனக்கு பயமா இருந்தா சொல்லு... நானும் உன்கூட வர்றேன்.''

''போலீசுக்கெல்லாம் போக முடியாது விஜேஷ். அப்படி போலீசுக்கு விஷயத்தைக் கொண்டு போனா அதனுடைய பின்விளைவுகள் ஒரு சுனாமி மாதிரி இருக்கும்.''

விஜேஷ் சிரித்தான். ''ஒரு பொய்யைப் பேசிட்டா, அந்தப் பொய்யைக் காப்பாத்த இன்னும் பத்து பொய்கள் சொல்ல வேண்டியிருக்குமாம். அதைத்தான் நீ இப்போ பண்ணிட்டு இருக்கே!''

''விஜேஷ்! நான் சொன்னதுல எதுவும் பொய் கிடையாது. தயவுபண்ணி அந்த வீட்டை வாங்கற எண்ணத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைங்க.''

''ஒரு கால்புள்ளியைக்கூட வெக்கற மாதிரி இல்லை. ஃப்ளோரா காரை நிறுத்தியாச்சு. வீடு இருக்கிற ஏரியா வுக்கு வந்துட்டோம்.''

''ஒருவேளை உங்களுக்கு அந்த வீடு பிடிக்க லைன்னா...''

''அதுக்கு சான்ஸே இல்லை. ஏன்னா, என்னுடைய நண்பன் ஃப்ரெட்ரிக்கும் அவனுடைய சிஸ்டர் ஃப்ளோராவும் ஒரு வீட்டை வாங்கிக்கச் சொல்லி சிபாரிசு பண்றாங்கன்னா, அதுல தப்பு நடக்க வாய்ப்பே இல்லை. ஸோ, இனிமே எனக்கு போன் பண்ணாதே! அந்த ஹட்சன் நதிக் கரையில் இருக்கிற வீட்டை வேற எந்த சோணகிரிக்காவது வாங்கிக் குடுத்து கமிஷன் பார்த்துடு!'' - பேசிவிட்டு செல்போனை அணைத்தான் விஜேஷ்.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஃப்ளோரா, பெர்ஃப்யூம் வாசனையோடு பார்த்தாள். பேசிய தமிழ் புரியாததால் பார்வையில் குழப்பம்.

''செல்போனில் யார்?''

''சிறிது நேரத்துக்கு முன்பு பேசிய அதே பெண்.''

''அந்தப் பெண்ணிடம் கோபமாகப் பேசினீர்களே... ஏதாவது பிரச்னையா?''

''ஒரு பிரச்னையும் இல்லை. ஹட்சன் நதிக் கரையில் ஒரு வீடு விற்பனைக்கு வருகிறதாம். வாங்கிக்கொள்ளும்படி சொன்னாள். நான் வேண்டாம் என்று சொன்னதால், அவளுக்குக் கோபம். நாம் இப்போது பார்க்கப்போகிற வீட்டைப்பற்றி பொய் மழை பொழிந்து, அதை வாங்கவே கூடாது என்று சொல்லி, என்னை ஒருவழி செய்துவிட்டாள்.''

''பொறாமை பிடித்தவள்! ரியல் எஸ்டேட் பிசினஸில் இது போன்ற பொறாமைக்காரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.''

இருவரும் காரைவிட்டு இறங்கினார்கள். நகரை விட்டுத் தள்ளி இருந்த அந்த இடத்தில் நிசப்தம் ஏதோ செதுக்கப்பட்ட பொருள் மாதிரி தெரிந்தது. மனித நடமாட்டம் அறவே இல்லை. அடர்த்தியான சிப்ரஸ் மரங்களுக்கு நடுவில், அந்தச் செங்காவி வண்ணம் பூசப்பட்ட வீடு கண்ணாமூச்சி காட்டியது.

ஃப்ளோரா கையில் சாவியோடு முன்னால் நடந்தாள்.

விஜேஷ் கேட்டான்... ''கார் உள்ளே போகாதா?''

ஃப்ளோரா ஒரு சின்னப் புன்னகையோடு, வீட்டுக்கு முன்பாகத் தெரிந்த அந்தப் பெரிய இரும்பு காம்பவுண்ட் கேட்டைக் காட்டினாள். கேட் ஒரு பக்கமாகச் சாய்ந்து மண்ணில் புதைந்து போயிருந்தது.

''சென்ற வாரம் பெய்த பெரு மழையில் காம்பவுண்ட் கேட்டின் பில்லர் சாய்ந்து, கேட் மண்ணில் போய் மாட்டிக்கொண்டது. இன்னும் இரண்டொரு நாட்களில் கேட்டைச் சரிசெய்யும் பணி துவங்கும். இப்போது நாம் இந்தப் பக்கவாட்டு கேட் வழியாக உள்ளே போய்விடலாம்.''

ஃப்ளோரா சொல்லிக்கொண்டே அந்தச் சிறிய கேட்டில் இருந்த பூட்டுக்கு விடுதலை கொடுத்து கேட்டைத் தள்ளினாள். அது 'ழேய்ய்....' என்று ஒரு குடிகாரனைப் போல் கத்திக்கொண்டு பின்னால் போயிற்று. இருவரும் உள்ளே நுழைந்தார்கள். பனி பெய்து நனைந்து இருந்த புல் தரையில் ஃப்ளோரா முன்னால் நடந்து போக, விஜேஷ் அவளைப் பின்தொடர்ந்தான்.

பத்தடி நடந்தவன் சட்டென்று நின்றான். அவனுடைய முதுகில் யாரோ கைவைத்த மாதிரியான உணர்வு.

'நிஜமா... பிரமையா?' என்று யோசிப்பதற்குள், முதுகுக்குப் பின்னால் அந்த மூச்சிரைப்புச் சத்தம்!

கோவை

ந்த மத்தியான வேளையிலும், ஃப்ரிஜ்ஜில் வைத்த பொருள் போல் கோவை குளிர்ந்து போய் இருக்க, மின்மினி மொட்டை மாடியில் மெள்ள உலவியபடி செல்போனில் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தாள்.

''இல்ல மாலு... எனக்குக் கச்சேரி பண்றதுல இஷ்டமே இல்லை. என்னோட மிஸ்டர்தான் கம்பெல் பண்ணினார். ஏதோ இசை விழாவாம்... அதுக்குக் கிடைக்கிற ஃபண்ட்ஸ் எல்லாம் ஆதரவற்றோர் இல்லங்களுக்குப் போகுதாம். சரி, ஒரு நல்ல காரியத்துக்கு நாம கத்துக்கிட்ட பாட்டும் உதவட்டுமேன்னுதான் ஒப்புக்கிட்டேன். நீயும் உன் ஹஸ்பெண்டும் சரியா ஆறு மணிக்கெல்லாம் புரந்தரதாஸர் ஹாலுக்கு வந்துடுங்க. சீஃப் கெஸ்ட் வேறு யாருமில்லை, வானவராயர்தான்!'' - செல்போனில் பேசிக்கொண்டே திரும்பிய மின்மினி, வேலைக்காரி தயக்கமாக நிற்பதைப் பார்த்துவிட்டு, 'என்ன' என்பது போல் புருவங்களை உயர்த்தினாள்.

''அம்மா! கேட்ல இருக்கிற செக்யூரிட்டி பேசினாங்க. உங்களைப் பார்த்துப் பேசறதுக்காக பெரியவர் மல்லய்யா வந்து இருக்காராம். உள்ளே அனுப்பவான்னு கேட்டாங்க.''

மின்மினி சற்றே பதற்றமானாள். ''இதுக்கு என்கிட்டே கேட்கணுமா? அவர் எப்ப என்னைத் தேடி வந்தாலும், உடனடியாக உள்ளே அனுப்பிவைக்கணும்னு செக்யூரிட்டிகிட்டே ஏற்கெனவே சொல்லியிருந்தேனே!''

''இதோ அனுப்பச் சொல்றேம்மா!'' வேலைக்காரி படிகளில் இறங்கி ஓட, மின்மினி செல்போனுக்கு உதட்டைக் கொடுத்து, ''ஸாரி மாலு... எனக்குப் பாட்டு சொல்லிக்கொடுத்த குருநாதர் கீழே வந்து வெயிட் பண்ணிட்டு இருக்காராம். சாயந்திரம் நாம பார்ப்போம்!''

''யாரு... அந்த பெல்லாரி மல்லய்யாவா?''

''பரவாயில்லையே! அவரோட பேரை அட்சரசுத்தமாக ஞாபகம் வெச்சிருக்கியே!''

எதிர்முனையில் அந்த மாலு சிரித்தாள்... ''தெலுங்கு சினிமா பட டைட்டில் மாதிரி இருக்கிற அவரோட பேரை அவ்வளவு சுலபத்துல மறந்துட முடியுமா என்ன?''

''ஏய்! பெரியவங்களைக் கிண்டல் பண்ணாதே! பெல்லாரியில் நான் அப்பா-அம்மாவை இழந்துட்டு அநாதையா நின்னப்ப, அவர்தான் எனக்கு ஆதரவாக இருந்து மஹிளா சமிதி விடுதியில் இடம் வாங்கிக் கொடுத்து...''

''ஸாரி மின்மினி! இந்த பெல்லாரி ஃப்ளாஷ்பேக் ரீல் ரொம்பவும் பழசாயிடுச்சு. புதுசா வேற ஒரு பிரின்ட் போட்டுக்கோயேன்.''

''சாயந்திரம் வா சொல்றேன்... உன்னை...'' - மின்மினி பற்களைக் கடித்து, செல்போனை அணைத்தாள். படிகளில் வேகவேகமாக இறங்கி ஹாலுக்கு வந்தபோது, மல்லய்யா வாசற்படிகள் ஏறி உள்ளே வந்துகொண்டு இருந்தார்.

மல்லய்யாவுக்கு 60 வயது இருக்கலாம். சராசரி உயரத்தில், சற்றே கனத்த உடம்பு. ரோமம் இல்லாத முன் மண்டையை மூன்று விபூதிக் கோடுகளும், ஒரு குங்குமப் பொட்டும் குத்தகைக்கு எடுத்திருக்க... பின்னந்தலையில் இருந்த நீளமான முடிகள் ஒரு குடுமியாக மாறியிருந்தன. ஆந்திரா பாணியில் கட்டப்பட்ட வேட்டியும், மார்பைச் சுற்றியிருந்த வெள்ளை வஸ்திரமும் அவரை மதிப்போடு பார்க்கவைத்தது.

மின்மினி ஒட்டமும் நடையுமாகப் போய் அவருடைய பாதங்களில் விழுந்தாள். அவர் மின்மினியின் தலையில் தன் வலது கையைவைத்தார். ''நீ என்னிக்கும் நல்லாயிருக்கணும்... எழுந்திரும்மா!''

மின்மினி எழுந்தாள். கும்பிட்ட கையோடு சொன்னாள், ''ஐயா! மன்னிக்கணும்...''

''எதுக்கு?''

''கேட்ல இருந்த சென்ட்ரி கான்ஸ்டபிள் உங்களை உடனே உள்ளே அனுப்பாம வாசல்ல நிக்க வெச்சதுக்காக.''

மல்லய்யா தன் கறை இல்லாத பற்களைக் காட்டிச் சிரித்தார். ''அட, என்னம்மா நீ... இதுக்கெல்லாம் போய் மன்னிப்புக் கேட்டுக்கிட்டு? நீ யாரு... ஒரு கலெக்டரோட மனைவி. யார் வேணும்னாலும் சர்வசாதாரணமா வந்து போறதுக்கு இது என்ன சத்திரமா? நான் இந்த வீட்டுக்கு வேண்டியவன்னு தெரிஞ்சிருந்தும் பாம் டிடெக்டர் வெச்சு சோதனை போட்டுத்தான் அனுப்பினாங்க. யார் யாருக்கு என்னென்ன கடமைகள் இருக்கோ, அதை அவங்க பண்ணியாகணும்!'' - மல்லய்யா சொல்லிக்கொண்டே போய், ஹாலில் போட்டிருந்த சோபாவில் சாய்ந்தார். மின்மினியும் எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.

''ஐயா! திடீர்னு கோயம்புத்தூருக்கு வந்து இருக்கீங்க. ஏதாவது விசேஷமா?''

''விசேஷம்தாம்மா! இங்கே வடவள்ளிக்குப் பக்கத்துல க்யூரியோ கார்டன் அவென்யூன்னு ஒரு காலனி இருக்கு. அந்தக் காலனியில் அம்சமான விநாயகர் கோயில் ஒண்ணு இருக்கு. ஆபத்சகாய சுந்தர விநாயகர்னு பேர். சக்தி வாய்ந்த விநாயகர். அந்தக் கோயிலோட கும்பாபிஷேகம் நாளைக்கு. அதுல கலந்துக்கச் சொல்லி எனக்கு அழைப்பு வந்தது. உடனே புறப்பட்டு வந்துட்டேன்.''

''ரொம்பச் சந்தோஷம். ஐயா, இன்னிக்குச் சாயந்திரம் நீங்க ஃப்ரீயா?''

''ஏம்மா கேட்கிறே?''

''ஐயா! இன்னிக்குச் சாயந்திரம் ஆர்.எஸ்.புரம் புரந்தரதாஸர் ஹால்ல என்னோட கச்சேரி. நீங்க அவசியம் முன் வரிசையில் உட்கார்ந்து கேக்கணும்.''

''பஞ்சாமிர்தம் சாப்பிடக் கூலியா?'' - சொல்லிச் சிரித்தவர் கேட்டார்... ''உன்னோட கணவர் எப்படி இருக்கார்மா? கல்யாணத்துல பார்த்தது. அதுக்கப்புறம் இந்த வீட்டுக்கு ரெண்டு தடவை வந்தும் அவரைப் பார்க்கவே முடியலை.''

''இன்னிக்கு அவரை நீங்க பார்த்துடலாங்கய்யா! மத்தியானம் லஞ்சுக்குக் கண்டிப்பா வர்றதாகச் சொல்லியிருக்கார். நாம எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாம். அவரும் உங்களைப் பார்க்கணும்னு சொல்லிட்டு இருப்பார். 'எனக்கு ஒரு வானம்பாடியைப் பரிசாகக் கொடுத்த வள்ளல் அவர்'னு புகழ்ந்துட்டே இருப்பார். நீங்க வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சா, அவர் ரொம்பவும் சந்தோஷப்படுவார். இப்பவே போன் பண்ணிச் சொல்லிடறேன்.''

மின்மினி செல்போனை எடுத்தாள். தன் கணவரின் பெர்சனல் செல்போனுக்கு எண்களை அழுத்தினாள். மறுமுனையில் ரிங்டோன் போய், குரல் கேட்டது.

''யெஸ்!'' பங்கஜ்குமாரின் குரல்.

''என்ன யெஸ்! நான் உங்க மின்மினி.''

''ஸாரி... ராங் நம்பர்!'' - பங்கஜ்குமாரின் குரலைத் தொடர்ந்து, செல்போன் இணைப்பு அறுந்தது.

Tuesday, April 6, 2010

இனி, மின்மினி Episode 2


கோவை

போட்டோவில் கேமராவை நேர்ப்பார்வை பார்த்துப் புன்னகைத்துக்கொண்டு இருந்த மின்மினியைப் பார்த்ததும், பங்கஜ் குமாரின் உடம்பில் இருந்த ஒட்டுமொத்த நரம்பு மண்டலமும் ஓர் அதிர்வுக்கு உட்பட்டு, ரத்தத் தில் வெப்பம் பரவியது. அது மூளைக்குள் போய் குபுகுபுத்தது.

'இது மின்மினிதானா?' - பார்வைக்குக் கூர்மை கொடுத்துக் கண்களைச் சுருக்கிய பங்கஜ்குமாரை பெரியவர் ஒரு கேலிப் புன்னகையோடு ஏறிட்டார். குரலைத் தாழ்த்தி ஏற்ற இறக்கத்தோடு கேட்டார்... ''என்னங்கய்யா... இந்தப் போட்டோவைப் பார்த்ததும் அப்படியே ஆடிப்போயிட்டீங்க..? இந்தப் போட்டோவில் இருக்கிற பெண்ணை உங்களுக்குத் தெரியுமா?''

பெரியவரின் கையில் இருந்த போட்டோவைப் பறித்து, அதையே சில விநாடிகள் வரை வெறித்தார் பங்கஜ்குமார்.

அவருடைய மனைவி மின்மினிதான்! சந்தேகமே இல்லை. வலது கன்னத்தின் கீழ்ப் பகுதியில் ஒட்டியிருந்த அந்தக் கடுகு சைஸ் மச்சமும், சற்றே விரிந்த காதுகளும் அவள் மின்மினிதான் என்று சூடம் ஏற்றி அடிக்காத குறையாகச் சத்தியம் செய்தன. பெரியவரைத் தீப்பார்வை பார்த்தார்.

''இ... இ... இந்த போட்டோ உங்களுக்கு எப்படிக் கிடைச்சுது?'' - பங்கஜ்குமார் கோபத்தோடு கேட்ட கேள்விக்குப் பெரியவர் பவ்யமாகி, தன் இரண்டு கைகளையும் மார்புக்குக் குறுக்காகப் பெருக்கல் குறி போட்டுக்கொண்டார்.

''ஐயா! இது என் மருமகளோட போட்டோ. இந்தப் போட்டோ என்கிட்டே இல்லாம வேற யார்கிட்டே இருக்கும்? இந்த போட்டோவைத் தவிர, வேற ஒரு போட்டோவும் இருக்கு. பார்க்கறீங்களா?''-பெரியவர் கேட்டுக்கொண்டே தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த அந்த பிரவுன் நிறக் கவரை எடுத்துப் பிரித்தார். போஸ்ட் கார்டு சைஸில் இருந்த போட்டோ ஒன்றை அதிலிருந்து உருவி நீட்டினார், ''ம்... பாருங்க...''

போட்டோவை வாங்கிப் பார்த்த பங்கஜ்குமாருக்கு நெற்றி சட்டென்று வியர்த்து, வாய் உலர்ந்து போனது. அந்த வண்ணப் போட்டோவில் ஒரு சர்ச் பிரதானமாகத் தெரிய, அதன் பின்னணியில் கும்பல் ஒன்று தெரிந்தது. கும்பலின் மையத்தில் பாதிரியார் ஒருவர் வெள்ளை அங்கியில் நின்றிருக்க, அவருக்கு முன்னால் கிறிஸ்துவப் பாரம்பரியத் திருமண உடைகளோடு மின்மினியும் அந்த இளைஞரும் பார்வைக்குக் கிடைத்தார்கள். முகங்களில் பாதரசம் தடவிய மாதிரி பரவசம்.

பெரியவர் சொன்னார், ''ஐயா! அஞ்சு வருஷத்துக்கு முந்தி ஆந்திர மாநிலம் பெல்லாரியில் இருக்கிற ஒரு சர்ச்சில் என்னோட மகன் அல்போன்சுக்கும் மின்மினிக்கும் கல்யாணம் நடந்தபோது எடுத்த போட்டோ இது.''

பெரியவர் சொல்ல, போட்டோவைப் பிடித்து இருந்த பங்கஜ்குமாரின் கை நடுங்கியது. மூளை பிராமிஸ் செய்தது. 'இவள் மின்மினிதான். சந்தேகமே இல்லை!' அடித்துத் துவைத்த துணியாகத் துவண்டுபோன பங்கஜ்குமார் பெரியவரை வியர்த்த முகமாக ஏறிட்டார். ''உங்க மகன் பேர் என்ன சொன்னீங்க?''

''அல்போன்ஸ்.''

''அவர் இப்ப எங்கே?''

''வீட்ல இருக்கான். அவனுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை. மின்மினி அவனை விட்டுப் போனதிலிருந்தே பித்துப் பிடிச்சவன் மாதிரி ஆயிட்டான். குடிப் பழக்கத்தினால் ஆரோக்கியம் கெட்டுப்போய்... ஜாண்டிஸ் அட்டாக் ஆகி...''

எரிச்சலான பங்கஜ்குமார் கையமர்த்தினார். ''உங்க பேர் என்ன?''

''மைக்கேல் எர்னஸ்ட்...''

''என்ன பண்றீங்க..?''

''டவுன்ஹால்ல பீஃப் பிரியாணி ஸ்டால் ஒண்ணு நடத்திட்டு வர்றேன்!''

''மின்மினிக்கும் அல்போன்சுக்கும் கல்யாணம் நடந்ததாய்ச் சொன்னீங்க. கல்யாணம் பண்ணிக்கிட்ட அவங்க ஏன் பிரியணும்?''

''கல்யாணம் நடந்த ஒரு மணி நேரத்துக்குள்ளேயே அவங்க ரெண்டு பேருக் கும் நடுவுல ஏதோ பிரச்னை வந்தது. மின்மினி சண்டை போட்டுக்கிட்டுப் போயிட்டா.''

''என்ன பிரச்னை?''

''அது என்னான்னு எனக்குத் தெரியலீங்கய்யா! என்னோட பையன்கிட்டே கேட்டேன். அவன் சொல்லலை. மின்மினியைத் தனியா சந்திச்சுக் கேட்டேன். அவளும் சொல்லலை. ரெண்டு பேரையும் சேர்த்துவைக்க நான் முயற்சிகள் எடுத்துக்கிட்டு இருக்கும்போதே, மின்மினி பெல்லாரியில் இருந்த தன்னோட வீட்டைக் காலி பண்ணிட்டு, சென்னைக்குப் போயிட்டா. அவ வீட்டைக் காலி பண்ணின விவரம் எனக்கும் என் மகனுக்கும் நாலஞ்சு நாள் கழிச்சுதான் தெரிஞ்சுது. அல்போன்ஸ் இடிஞ்சுபோயிட்டான். நாங்களும் பெல்லாரியில் இருந்த வீட்டைக் காலி பண்ணிட்டு, மின்மினியைத் தேடி சென்னைக்குப் போனோம். கடந்த அஞ்சு வருஷ காலமா அவளைத் தேடி அலைஞ்சோம். மின்மினியை எங்களால கண்டுபிடிக்க முடியலை. போன வாரம் 'கொடீசியா' வளாகத்துல ஒரு ஃபங்ஷன் நடந்தப்ப நான் அங்கே இருந்தேன். அந்தச் சமயத்துல நீங்களும் மின்மினியும் அந்த ஃபங்ஷன்ல கலந்துக்கிறதுக்காக ஒரே கார்ல வந்தப்பதான் மின்மினிக்கும் உங்களுக்கும் கல்யாணம் நடந்திருக்கிற விவரம் எனக்குத் தெரிஞ்சுது. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. இந்த விஷயம் என் மகனுக்குக்கூடத் தெரியாது. சட்டப்படி மின்மினி என்னோட மருமக. அல்போன்ஸோட மனைவி. நீங்க அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது எந்த வகையில் நியாயம்னு தெரியலை. இந்தப் பிரச்னையை நான் ஒரு மனுவா எழுதிக் கொண்டாந்திருக்கேன். நீங்கதான் இதுக்கு ஒரு தீர்வு சொல்லணும்.''

பங்கஜ்குமார் சில விநாடிகள் கண் மூடி மௌனமாக இருந்துவிட்டு, பெரியவர் மைக்கேல் எர் னஸ்ட்டை ஏறிட்டார். ''உங்களுக்கு ஒரு தீர்வு வேணும். அவ்வளவுதானே?''

''ஆமாங்கய்யா! நான் நினைச்சிருந்தா பத்திரிகைக்கும் டி.வி-க்கும் போய் விஷயத்தைச் சொல்லி, இதைப் பெரிசுபடுத்தியிருக்க முடியும். அப்படி நான் பண்ண விரும்பலை. உங்ககிட்டே இருந்து எனக்கு ஒரு நியாயமான முடிவு கிடைக்கும்கிற நம்பிக்கை யில்தான் உங்களை ரெண்டு நாளாய்ப் பார்க்க முயற்சி எடுத்து, இன்னிக்குப் பார்த்துட்டேன்.''

''இந்த விஷயத்தை வெளியே யார்கிட்டேயும் சொல்லலையே?''

''இல்லீங்கய்யா!''

''சரி... நாளை காலையில் உங்க மகனோடு என் பங்களாவுக்கு வந்துடுங்க. மேற்கொண்டு பேச வேண்டியதை அங்கே வெச்சுப் பேசிக்குவோம்.''

''எத்தனை மணிக்கு வரணுங்கய்யா?''

''ஏழு மணிக்கெல்லாம் வந்துடுங்க.''

''சரிங்கய்யா!''-மைக்கேல் எர்னஸ்ட் கும்பிடு ஒன்றைப் போட்டுவிட்டு, அறையில் இருந்து வெளி யேற, வெளிறிப்போன முகத்தோடு அவருடைய முதுகையே வெறித்தார் கலெக்டர் பங்கஜ்குமார்.

நியூயார்க்

பேர் காமாட்சி, ஊர் காஞ்சிபுரம் என்று சொல்லி செல்போனில் பேசிய அந்தப் பெண்ணுடன் விஜேஷ் மேற்கொண்டு பேச முயல, 'பை' சொல்லி இணைப்பைத் துண்டித்தாள்.

விஜேஷின் முகம் முழுக்கக் குழப்பமும் வியப்பும் பார்ட்னர்ஷிப் போட்டுக்கொண்டு ஸ்லோமோஷனில் பரவியது. அதைக் கவனித்துவிட்டு, காரை ஓட்டிக் கொண்டு இருந்த ஃப்ளோரா கேட்டாள்... ''செல் போனில் பேசியது யார் மிஸ்டர் விஜேஷ்?''

'இவளிடம் சொல்லலாமா, வேண்டாமா' என்று விநாடிகள் யோசித்து, ஆறாவது விநாடியில் வேண்டாம் என்று முடிவு எடுத்து, ''அது... அது... ஒரு ராங் நம்பர்'' என்றான் விஜேஷ்.

''ராங் நம்பரா?''

''ஆமாம்...''

''ஒரு லாயரிடம் பொய் சொல்லக் கூடாது என்பது பொதுவான விதி. உங்களுக்கு வந்தது ராங் நம்பர் இல்லை. சரியான நம்பர்தான். ஆனால், பேசியது மட்டும் ராங் பர்சன். நான் சொல்வது சரியா?''

விஜேஷ் அவளை வியப்பாகப் பார்க்க, அவள் சிரித்தாள். ''உங்களுக்கு வந்தது ராங் நம்பராக இருந்திருந்தால், அந்தப் பேச்சு ஒரு பத்து விநாடிகளுக்குள் முடிந்துபோயிருக்கும். ஆனால், நீங்கள் ஒரு நிமிடம் பேசினீர்கள். அந்த ஒரு நிமிடப் பேச்சு முடிவதற்குள், உங்கள் முகத்தில் ஓராயிரம் முகபாவங்கள். அதிர்ச்சி அலைகள். போனில் ஏதாவது கெட்ட செய்தியா?

''கிட்டத்தட்ட...''

''பேசியது யார்... ஆணா, பெண்ணா?''

''பெண்.''

''என்ன சொன்னாள்?''

விஜேஷ் தயங்க, ஃப்ளோரா சிரித்துக் கண் சிமிட் டினாள். ''என்னைப்பற்றி அந்தப் பெண் ஏதாவது மோசமான முறையில் விமர்சனம் செய்தாளா?''

''இல்லை.''

''பின்னே?''

''என்னை எச்சரிக்கை செய்தாள்.''

''எச்சரிக்கை செய்தாளா?''

''ம்... கடந்த ஆறு மாத காலத்தில் நீங்கள் சொல் லும் அந்த வீட்டை வாங்க அக்ரிமென்ட் போட்ட இரண்டு பேர் அடுத்தடுத்து இறந்துபோய்விட்டார் களாம். 'இப்போது நீங்கள் மூன்றாவது நபராக அந்த வீட்டை வாங்க வந்திருக்கிறீர்கள். இந்த நிமிஷத் தோடு அந்த எண்ணத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, பாரீசுக்குப் போக அடுத்த ஃப்ளைட் டைப் பிடியுங்கள்' என்று சொன்னாள்.''

ஃப்ளோராவின் முகம் லேசாக மாறியது. ''நீங்கள் என்ன சொன்னீர்கள் விஜேஷ்?''

''நான் மேற்கொண்டு அவளிடம் பேசுவதற்கு முன்பாக இணைப்பைத் துண்டித்துவிட்டாள். பப்ளிக் பூத்தில் இருந்து பேசியிருக்கிறாள். அவள் ஒரு இந்தி யப் பெண். அதிலும் தமிழ்நாட்டுப் பெண். பெயர் காமாட்சி. ஊர் காஞ்சிபுரம்.

ஃப்ளோரா சில விநாடிகள் வரை மௌனம் காத்து விட்டு, விஜேஷைத் திரும்பிப் பார்த்தாள். ''இப்போது உங்கள் முடிவு என்ன விஜேஷ்? அந்த வீட்டை வாங்கப் போகிறீர்களா, இல்லை அவள் சொன்னது போல அடுத்த ஃப்ளைட்டைப் பிடித்து, பாரீஸ்போகப்போகிறீர்களா?''

''அந்த காமாட்சி சொன்னது உண்மையா, பொய்யா? நீங்கள் சொல்லும் அந்த வீட்டை இரண்டு பேர் வாங்க முயற்சி செய்து, அடுத்தடுத்து இறந்துபோனது உண்மையா?''

''உண்மைதான்!''

''எப்படி இறந்தார்கள்?''

''ஹார்ட் அட்டாக்! வீட்டை வாங்க வந்த அந்த இரண்டு பேருமே 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். ஒருவர் பெண். மற்றவர் ஆண். பெண்ணின் பெயர் பிரிட்டனி ஜான்சன். ஆணின் பெயர் ஜான் கரோல். முதலில் வீட்டை வாங்க முயற்சி செய்து அக்ரிமென்ட் போட்டவர் பிரிட்டனி ஜான்சன். அவருக்கு ஏற்கெனவே இருதய ஆபரேஷன் நடந்திருக்கிறது. டாக்டர் சொல்லியிருந்த நடைப்பயிற்சி தூரத்தைக் காட்டிலும் அதிக தூரம் நடந்ததால், மாரடைப்பு ஏற்பட்டு மரணம். அதற்குப் பிறகு இரண்டாவதாக அக்ரிமென்ட் போட்டவர் ஜான் கரோல். அவர் பைபாஸ் சர்ஜரி செய்துகொண்டவர். குடிகாரர். ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் அளவுக்கு மீறிக் குடிப்பவர். ஒரு சனிக் கிழமை இரவு மதுவின் தாக்கம் அதிகமாகி, மாஸிவ் அட்டாக் ஏற்பட்டு மரணம். இரண்டுமே இயற்கையான முறையில் நேர்ந்த மரணங்கள். வீட்டை வாங்க நினைத்ததற்கும் அவர்கள் இறந்து போனதற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. இது ஒரு சாதாரண பிரச்னை. இதை யாரோ ஊதிவிட்டுப் பெரிதாக்க நினைக்கிறார்கள்.''

''இதனால் யாருக்கு என்ன லாபம்?''

''அதுதான் எனக்கும் புரியவில்லை. உங்களுக்கு போன் செய்து பயமுறுத்திய காமாட்சி யார் என்று தெரிந்தால்தான் இந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கும். ஆனால், மறுபடியும் அந்தக் காமாட்சி உங்களுக்கு போன் செய்ய மாட்டாள். ஏனென்றால், அந்த வீட்டை வாங்க விடாதபடி பயமுறுத்துவது ஒன்றுதான் அவளுடைய நோக்கம். இப்போது நான் உங்களிடம் கேட்க விரும்புகிற கேள்வி இதுதான். காமாட்சியின் எச்சரிக்கைக்கு உங்களுடைய ரியாக்ஷன் என்ன?''

விஜேஷ் சிரித்தான். ''அவளுடைய எச்சரிக்கையை நான் குப்பைக் கூடைக்கு அனுப்பியாயிற்று. உங்களுடைய சகோதரன் ஃப்ரெட்ரிக் என் உயிர் நண்பன். எனக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவன். நியூயார்க்கில் நல்ல வேலை கிடைத்து போகப்போகிறேன் என்று தெரிந்ததும், அங்கே ஒரு வீட்டை வாங் கும் யோசனையை அவன்தான் சொன் னான். அதற்கேற்றாற்போல் ஒரு பழங் கால வீடு உடனடியாக விற்பனைக்கு இருக்கிறது என்று நீங்கள் போனில் சொன்னதும், நான் உடனே புறப்பட்டு வந்துவிட்டேன். நீங்கள் ஒரு லாயர். அந்த வீட்டை விற்கக்கூடிய உரிமையான பவர் ஆஃப் அட்டர்னி உங்களிடம் இருப்பதால், எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.''

''நீங்கள் இப்படிப் பேசுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இது எந்தப் பிரச்னையும் இல்லாத வீடு. காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக, வீட்டை வாங்க முயற்சித்த இரண்டு பேர் இயற்கையான முறையில் இறந்து போயிருக் கிறார்கள். அதை ஒரு பெண் பொழுது போகாமல் கிளறிப் பார்த்து உங்களுக்கு கிலியை ஏற்படுத்த நினைத்து போன் செய்திருக்கிறாள்.''

''நான் அவளை மறந்துவிட்டேன் ஃப்ளோரா! எனக்கு அந்த வீட்டைக் காட்டுங்கள். முடிவாக ஒரு விலை பேசி அக்ரிமென்ட் போட்டுக்கொள்ளலாம். எனக்கு பேங்கில் லோன் சாங்ஷன் ஆன துமே ரெஜிஸ்ட்ரேஷன்!''

''அப்படியென்றால் அந்தக் காமாட்சி யின் எச்சரிக்கையைப் பொருட்படுத்த வில்லையா?''

''ஒரு சதவிகிதம்கூட! உங்கள் வீட்டுக்குப் போகும் வழியில்தான் அந்த வீடு இருப்பதாகச் சொன்னீர்கள் ஃப்ளோரா. போகும்போதே ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போய்விடலாமா?''

''வீட்டுக்குப் போய்க் குளித்துச் சாப்பிட்டு, சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு பிறகு போகலாமே?''

''இல்லை ஃப்ளோரா! எனக்கு விமானப் பய ணக் களைப்பு கொஞ்சம்கூட இல்லை. எதற்காக நியூயார்க் வந்தேனோ, அந்த வேலையை முதலில் பார்த்துவிடலாம்.''

''இன்னும் பத்தே நிமிடங்களில் அந்த வீடு இருக் கும் ஓல்ட் ப்ளாக் க்ரூவ்ஸ் ஏரியா வந்துவிடும்.''

''பிறகென்ன? பார்த்துவிட்டே போய்விடலாம்!''

கார் நெடுஞ்சாலையில் நான்காவது டிராக்கில் ஓர் இலவம்பஞ்சுத் துணுக்காகப் பறந்தது. நியூ யார்க்கின் பிரமாண்டமான கட்டடங்கள் இப்போது காணாமல் போயிருக்க, தொலைவில் மலைகள் நீல நிற பென்சிலால் கிழிக்கப்பட்ட கோணல்மாணல் கோடுகளாகத் தெரிந்தன.

விஜேஷ், ஃப்ளோராவிடம் ஏதோ பேச முயல, அவனுடைய செல்போன் ரிங்டோனை வெளியிட் டது. எடுத்து, அழைப்பது யார் என்று பார்த்தான். புது நம்பர். செல்போனைக் காதுக்குக் கொடுத்து, ''யெஸ்'' என்றான்.

''நான் காஞ்சிபுரம் காமாட்சி. என்ன முடிவு பண்ணியிருக்கீங்க விஜேஷ்?''

''ஒரு பப்ளிக் டெலிபோன் பூத்துக்குள்ளே பூந் துட்டுப் பேசறவங்களை நான் நம்பறது இல்லை. ஃப்ளோரா இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த வீட்டைக் காட்டப்போறாங்க. நான் பார்க்கப் போறேன்.''

காமாட்சி சிரித்தாள்.

''என்ன சிரிக்கிறே?''

''வலிது... வலிது... விதி வலிது! இப்ப சிரிச்சது நானில்லை. உங்க முதுகுக்குப் பின்னாடி இருக்கிற விதி!''


Sunday, April 4, 2010

இனி, மின்மினி Episode 1

Thanks, Ananda Vikatan

நியூயார்க்

நியூயார்க் விமான நிலையத்தில் விமானம் இறங்கிக்கொண்டு இருந்தபோது காலை 7 மணி. சூரியன் பனிப் போர்வைக்குள் சிக்கி, பட்டர் தாளில் சுற்றப்பட்ட ஆப்பிள் போலத் தெரிய... கோலப் பொடியைத் தூவும் தினுசில் பனி மழை.

விஜேஷ் கெடுபிடியான கஸ்டம்ஸை முடித்துக்கொண்டு லவுஞ்சுக்குள் நுழைந்தபோது, அந்த அழகான பெண் பொன்னிற முடியும், கோபால்ட் நீல நிறக் கண்களுமாக விஜேஷை எதிர்கொண்டாள். கையில் அரை அடி உயரத்தில் ஒரு மினி பொக்கே.

''வெல்கம் விஜேஷ்!''

''யூ... யூ... ஃப்ளோரா?''

''யெஸ்!''

விஜேஷ் ஒரு புன்னகையை உதட்டில் நிறுத்தி ஆங்கிலத்தில் ஆச்சர்யப்பட்டான். ''என் நண்பன் ஃப்ரெட்ரிக்குக்கு இப்படி ஓர் அழகான தங்கை இருப்பாள் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை.''

ஃப்ளோரா சிரித்தாள். வாய்க்குள் இருந்து ஒரு முத்துச்சரம் வெளிப்பட்டு, எனக்கு என்ன விலை கொடுக்கலாம் என்று கேட்டது.

''பயணம் எப்படி இருந்தது?''

''போர்! எந்த ஏர் ஹோஸ்டஸ்சும் பார்க்கும்படி இல்லை. உணவும் சரி இல்லை. பெயர் தெரியாத ஏதோ ஒரு திரவத்தில் ஊறிய வெள்ளரிக்காய்த் துண்டுகளும், வெண்ணெய் தடவாத காய்ந்த ரொட்டிகளையும் கொடுத்தால், அது எப்படி வயிற்றுக்குள் போகும்?''

ஃப்ளோரா மறுபடியும் முத்துச்சரத்தைக் காட்டினாள். 'ஓல்ட் வெஸ்ட்ப்யூரி'க்குப் போகும் வழியில் ஒரு நல்ல இண்டியன் ரெஸ்டாரன்ட் இருக்கிறது.''

''வேண்டாம்... வேண்டாம்! இப்போது பசி இல்லை. என் ஆர்வம் எல்லாம் இப்போது எதில் தெரியுமா? நான் வாங்கப்போகும் அந்த வீட்டைப்பற்றித்தான். இன்றைக்கே நான் வீட்டைப் பார்த்து முடிவு செய்ய வேண்டும் ஃப்ளோரா.''

''கவலைப்படாதீர்கள் மிஸ்டர் விஜேஷ். என் வீட்டுக்குப் போகும் வழியில் தான் அந்த வீடு இருக்கிறது. கொஞ்சம் அமைதியான சூழ்நிலையில் அமைந்த பழங்கால வீடுதான் என்றாலும், உறுதியான வீடு. விலையைப்பற்றிக் கவலைப் பட வேண்டாம். ஏனென்றால், நான் ஒரு லாயர் என்கிற முறையில் அந்த வீட்டை விற்பதற்கான முழு உரிமையும் என்னிடம்தான் உள்ளது.''

''அந்தத் தைரியத்தில்தான் பாரீஸில் இருந்து புறப்பட்டு வந்திருக்கிறேன்!''

இருவரும் விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்தார்கள். ஃப்ளோரா தன்னுடைய பென்ஸ் காரை பார்க்கிங் வரிசையில் இருந்து உருவிக்கொண்டாள். விஜேஷ் தன் கையில் இருந்த சூட்கேஸை டிக்கியில் வைத்துவிட்டு, ஃப்ளோராவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். காரின் ஏ.சி. காற்றில் பெர்ஃப்யூம் மணத்தது.


காரை விரட்டினாள் ஃப்ளோரா. ரோட்டின் நான்கு டிராக்குகளில் அதிவேக டிராக்கைத் தேர்ந்தெடுத்தாள். 140 மைல் வேகத்தில் பென்ஸ் வீல்கள் சுழன்றன.

ஃப்ளோரா கேட்டாள்... ''நியூயார்க்குக்கு முதல்தடவை வருகிறீர்கள். உங்கள் பார்வையில் நியூயார்க் எப்படி?''

''மகா அழுக்கு! இப்படி ஓர் அழுக்கான நகரத்தை இந்தியாவில்கூடப் பார்க்க முடியாது. விமானத்தில் இருந்து கீழே இறங்கியவுடனே எனக்குப் பெரிய ஏமாற்றம். நம்முடைய ஷூவில் உள்ள தூசி பட்டு நியூயார்க் விமான நிலையத்தின் தரை அழுக்காகிவிடுமோ என்று விமானத்தில் இருந்தபோது நான் கற்பனை செய்திருந்தேன். ஆனால், விமான நிலையத்தில் இறங்கியபோது, அங்கு இருந்த அழுக்கு பட்டு என் ஷூ விணாகிவிடக் கூடாதேன்னு கவலைப்பட்டேன். விமான நிலையம் மட்டும்தான் அழுக்கு என்று நினைத்தேன். அதைவிட, நகரம் ரொம்பவும் மோசம். பாருங்கள், ரோட்டோரங்களில் எவ்வளவு குப்பைகள்?''

''அதற்குக் காரணம், இங்குள்ள மக்கள்தொகை. அது தவிர, நீக்ரோக்களின்...'' என்று ஃப்ளோரா பேசிக்கொண்டு இருக்கும்போதே விஜேஷின் செல்போன் ரிங்டோனை வெளியிட்டது.

''எக்ஸ்கியூஸ்மீ ஃப்ளோரா'' என்று சொல்லி, செல்போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான். ஒரு நம்பர்.

குரல் கொடுத்தான்.

''யெஸ்...''

''பேசறது விஜேஷா?''- ஒரு பெண் குரல் கேட்டது. நல்ல தமிழ்.

''ஆமா...''

''நீங்க பாரீஸில் ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கறீங்க இல்லையா?''

''நீங்க யாரு?''

''அது கடைசியில்! நான் இப்போ உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லணும். சொல்லலாமா... வேண்டாமா?''

''சொல்லு...''

''நியூயார்க்ல இப்போ உங்களுக்கு நல்ல வேலை கிடைச்சிருக்கு. அதுக்கு முன்னோட்டமாக ஒரு வீட்டைப் பார்த்து விலை பேச வந்திருக்கீங்க. சரியா?''

''ரொம்ப சரி!''

''உங்ககூட பாரீஸில் வேலை செய்யற ஃப்ரெட்ரிக்கோட சிஸ்டர் ஃப்ளோரா ஒரு லாயர். அவளோட கஸ்டடியில் இருக்கிற ஒரு பழைய வீட்டை வாங்கலாம்னு உங்களுக்குள்ளே ஓர் எண்ணம். சரியா?''

''சரி!''

''இந்த நிமிஷத்தோடு அந்த எண்ணத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வெச்சுட்டு, பாரிசுக்குப் போக அடுத்த ஃப்ளைட்டைப் பிடிங்க.''

''ஏன், அந்த வீட்டுக்கு என்ன?''

''சொன்னா நம்பணும்...''

''சொல்லு...''

''கடந்த ஆறு மாச காலத்துல அந்த வீட்டை வாங்க முயற்சி பண்ணி, அக்ரிமென்ட் போட்ட ரெண்டு பேர் அடுத்தடுத்து இறந்துட்டாங்க. இப்ப நீங்க மூணாவதா வந்திருக்கீங்க. நீங்க இந்தியா. அதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்ங்கிற காரணத்துனாலதான் போன் பண்ணிப் பேசிட்டு இருக்கேன்.''

''சரி! மொதல்ல நீ யார்னு சொல்லு!''

''என் பேர் காமாட்சி.''

''ஊரு?''

''காஞ்சிபுரம்.''

கோவை

மாவட்ட ஆட்சியர் அலுவலகம். காலை 11 மணி. மக்கள் ஏகப்பட்ட பிரச்னைகளோடு வரிசைகளில் காத்துக்கொண்டு இருக்க... கலெக்டர் பங்கஜ் குமார் ஜீப்பில் இருந்து இறங்கி, வேக வேகமாக உள்ளே போனார். பி.ஏ. எதிர்ப்பட்டார். அவர் விஷ் செய்ததை அலட்சியமாக ஏற்றுக்கொண்டார்.

''ஒரு அஞ்சு நிமிஷம் உள்ளே வாங்க'' என்றார்.

''யெஸ் ஸார்...''

பங்கஜ் குமார் தன் அறைக்குள் நுழைந்து நாற்காலிக்குத் தன் முதுகைக் கொடுத்துக்கொண்டே பி.ஏ-வை ஏறிட்டார். பேச்சில் அனல் பறந்தது. ''சண்முகம்! இது என்ன போலீஸ் ஸ்டேஷனா... இல்லை, கலெக்டர் ஆபீஸா? புருசன் பொஞ்சாதி சண்டை, என் பொண்டாட்டி எவன்கூடவோ ஓடிப் போயிட்டா... தேடிக் கண்டுபிடிச்சுக் குடுங்கன்னு ஒரு கூட்டம், அரிசியில் கல் இருக்கு; தண்ணியில் புழு இருக்குன்னு சொல்லிக்கிட்டு ரோடு மறியல். இந்த மாசத்துல மட்டும் 27 பேர் ஏதேதோ பிரச்னைகளுக்காக மண்ணெண்ணெய் டின்களோடு வந்து தீக்குளிக்கப் போறதா என் ஜீப் முன்னாடி உட்கார்ந்து பாடாய்ப்படுத்திட்டாங்க. இந்தப் பிரச்னைகளை ஏ.சி. உதவியோடு நீங்க பார்த்துக்கக் கூடாதா?''

''சார்... அதுல என்ன பிரச்னைன்னா?''

''நீங்க வழக்கமா சொல்ற எந்த எக்ஸ்பிளனேஷனும் எனக்கு வேண்டியது இல்லை. நான் மாவட்ட நிர்வாகப் பணிகளைக் கவனிப்பேனா? இல்லே... காணாமப் போன பொண்டாட்டிகளைத் தேடி அவனவன் புருஷன்களோடு சேர்த்துவெச்சிட்டு இருப்பேனா. நீங்களே சொல்லுங்க?''

''ஸாரி சார்... இனிமே இது மாதிரியான விஷயங்கள் உங்க மேஜை வரைக்கும் வராம நான் பார்த்துக்கிறேன் சார்!''

''இதையே 100 தடவை சொல்லிட்டீங்க...'' பங்கஜ் குமார் எரிச்சலோடு சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அவருடைய செல்போன் அழைத்தது. எடுத்தார். 'விமிழிவிமிழிமி சிகிலிலிமிழிநி' என்று டிஸ்ப்ளே சொன்னது.

பி.ஏ-வைத் திரும்பிப் பார்த்தார்.

''நான் வர்றேன் சார்...'' பி.ஏ. அறையைக் கடந்து போனதும், பங்கஜ் குமார் மலர்ந்த முகமாய் செல்போனைக் காதுக்குப் பொருத்தி, மெதுவாகக் குரல் கொடுத்தார். ''சொல்லு மினி...''

''எனக்குக் காலையில் இருந்து மனசே சரியில்லைங்க.''

''ஏன், என்னாச்சு?''

''ஏதோ போன் வந்ததுன்னு சொல்லி, டிபன்கூடச் சாப்பிடாம அவசர அவசரமாக் கிளம்பிட்டீங்களே? எனக்கும் அதுக்கு அப்புறம் சாப்பிடத் தோணலை. எல்லாத்தையும் தூக்கி வேலைக்காரிக்குக் கொடுத்துட்டேன்.''

''என்னது! நீயும் சாப்பிடலையா? இதோ பார் மினி! நம்ம கல்யாணம் நடக்கிறதுக்கு முந்தி உன்னைப் பெண் பார்க்க வரும்போது, ஒரு அஞ்சு நிமிஷம் தனியா சந்திச்சுப் பேசினோம். அப்ப நான் என்ன சொன்னேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?''

''நல்லா ஞாபகம் இருக்கு.''

''என்ன சொன்னேன்?''

''நான் ஒரு கலெக்டரா இருக்கேன்கிற காரணத்துக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்காதே. மாசத்துல பாதி நாள் கேம்ப் போயிடுவேன். ஜனாதிபதி, பிரதமர்னு யார் வந்தாலும் வீட்டையும் உன்னையும் சுத்தமா மறந்துடுவேன். கலவரம் நடந்தா, அந்தப் பகுதிகளுக்குப் போகணும்... தீவிரவாதிகளோட மிரட்டல்களை எதிர்கொள்ளணும்... இப்படி வரிசையாக ஏதேதோ சொன்ன மாதிரி ஞாபகம். அதை மறுபடியும் ஒரு தடவை ரீ-வைண்ட் பண்ணிப் பார்த்துக்க.''

''சரி... சரி! மத்தியானம் லஞ்ச்சுக்காவது வருவீங்களா... மாட்டீங்களா?''

''இன்னிக்கு மக்களின் குறை தீர்க்கும் நாள். நிறைய மனுக்கள் வரும்... படிச்சுப் பார்த்து உடனடியா முடிவு எடுக்கணும். எவ்வளவு நேரமாகும்னு எனக்கே தெரியாது மினி!''

''நீங்க வரலைன்னா, நான் மத்தியானமும் சாப்பிட மாட்டேன். உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் நடந்து இன்னிக்கு 51-வது நாள். இந்த ரெண்டு மாச காலத்துல நாம ரெண்டு பேரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்ட நாட்களை விரல்விட்டு எண்ணிடலாம். நீங்க இன்னிக்கு என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்களோ, எனக்குத் தெரியாது. சாப்பிட வரணும்.''

''இதோ பார் மினி... நான் வரலைன்னு பட்டினி கிடக்காதே. இன்னிக்குச் சாயந்தரம் புரந்தரதாஸ் ஹாலில் உன்னோட கச்சேரி இருக்கு. நீ சாப்பிடாமப் போனா ரெண்டு கீர்த்தனம் பாடறதுக்குள்ளே 'ஃபெய்ன்ட்' ஆயிடுவே!''

''அது உங்களுக்குப் புரிஞ்சா சரி! நான் இன்னிக்கு சபாவில் கச்சேரி பண்ணும்போது, ஒவ்வொரு கீர்த்தனைக்கும் அப்ளாஸ் வாங்கணும்னா... மத்தியானம் லஞ்ச்சுக்கு வரணும்... என்கூட உட்கார்ந்து சாப்பிடணும்!''

''நான் உன்னோட கழுத்துல தாலி கட்டினதே அந்தக் கீர்த்தனைகளோட இனிமைக்காகத்தான். அந்தக் கீர்த்தனைகளை நான் பட்டினி போட விரும்பலை. சரியாய் ஒரு மணிக்கு வந்துடறேன்.''

''தேங்க்யூடா!''

''என்ன சொன்னே?''

''ஸாரிடா...'' மறுமுனையில் மின்மினி ஒரு சிரிப்போடு செல்போனை அணைத்துவிட, பங்கஜ் குமாரும் தனக்குள் பீறிட்ட சிரிப்பை மென்றபடி செல்போனை அணைத்தார்.

கதவுக்கு வெளியே பியூன் அன்றைக்கு வந்த தபால் கட்டோடு நின்றிருப்பது தெரிந்தது. மேஜையின் மேல் இருந்த அழைப்பு மணியைத் தட்டியதும், பியூன் உள்ளே வந்தான். தபால்களை வைத்துக்கொண்டே தயக்கக் குரலில் கூப்பிட்டான்.

''ஐயா...''

''என்ன சாமித்துரை?''

''கடந்த ரெண்டு மூணு நாளா கையில் ஒரு கோரிக்கை மனுவோடு ஒருத்தர் வந்து உங்களைப் பார்க்கிறதுக்காக கால் கடுக்க நிக்கிறார். கோரிக்கை மனுவைப் பெட்டியில் போட்டுட்டுப் போங்கன்னு சொன்னாலும் அவர் கேட்கிறது இல்லை.''

''கோரிக்கை என்னன்னு கேட்டியா?''

''கையில் மனு எழுதிவெச்சிருக்கார் ஐயா.''

''அந்த ஆளை உள்ளே அனுப்பு.''

பியூன் தலையாட்டிவிட்டு வெளியேறிப் போனதும் அடுத்த நிமிடத்தின் ஆரம்பத்தில் அந்தப் பெரியவர் உள்ளே வந்தார். முடி கொட்டிப் போன மண்டை. மோவாயில் கொத்தாக நரை தாடி.

''ஐயா! வணக்கம்...''

பங்கஜ் குமார் நிமிர்ந்தார்.

''உங்களுக்கு என்ன வேணும்?''

''ஐயா! என்னோட கோரிக்கையை ஒரு மனுவா எழுதிக் கொண்டுவந்து இருக்கேன். அதை நீங்க படிச்சு...''

''வேண்டாம்... உங்க கோரிக்கை என்னன்னு வாய்லயே சொல்லுங்க...''

''ஐயா... அது வந்து... என்னோட மருமக இப்ப என்னையும் என் பையனையும் விட்டுட்டு வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா. சட்டப்படி விவாகரத்தும் ஆகலை. இந்த விஷயத்துல நீங்கதான் எங்களுக்கு உதவி பண்ணணும்!''

பங்கஜ் குமாருக்குள் கோபம் கொப்பளித்துக் கிளம்பியது. ஆத்திரத்தோடு நாற்காலியைத் தள்ளிக்கொண்டு எழ முயன்றவர், பெரியவரின் கையில் இருந்த போட்டோவைப் பார்த்ததும் தளர்ந்தார்.

''ஐயா! இதுதான் என் மருமகளோட போட்டோ.''

போட்டோவில் மின்மினி!

Saturday, March 6, 2010

கண்களை நம்பாதே!

Sunday, February 21, 2010

சீனா மஞ்சுரி



ரெசிப் ஆப் தி வீக் ;-)

என் கைவண்ணம்.
Posted by Picasa

Monday, February 15, 2010

புதிய உலகம் பகுதி 1

முன்பே கூறியபடி என் மனைவியின் கர்ப்ப காலங்களை பற்றியும், கர்ப்பிணிகள் செய்ய வேண்டியன, மற்றும் செய்ய கூடாதவை பற்றியும், இனிவரும் பதிவு உங்களுக்கு அறிவூட்டும்.

முதலில் இந்த காலகட்டங்களில் எல்லோறோம் பின்பற்றவேண்டிய வலைத்தளம், பதிவுகள், புத்தகங்கள், மற்றும் மாத இதழ்கள் பற்றி விரிவாக சொல்லிவிடுகிறேன்.

இது என்னடா, இவன் இப்படி சொல்றான், வீட்ல பெரியவங்களுக்கு தெரியாததா இந்த காலத்து புக்ல போடுடபோறான்? னு அங்கலைபவர்களுக்கு திரும்பவும் சொல்கிறேன்,இந்த உலகத்தில் எல்லாம் தெரிந்தவர்கள் யாரும் இல்லை.

இன்று உங்களும் ஒரு வலைதளத்தை பற்றியும், ஒரு ப்ளாக் பற்றியும் பகிர்ந்து கொள்ள போகிறேன்.


முதலில் பேபி சென்டர்...

நமது நாட்டில் எப்படி என்று தெரியவில்லை , அனால் வெளிநாட்டில் முக்கியமாக US ல் கரு தரித்த முதல்நாளே இந்த சைட்ல் மெம்பர் ஆகி விடுவார்கள்.

கரு தரிக்க டிப்ஸ், கரு நன்றாக வளர என்ன செய்ய வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், Due Date கால்குலேடர், Immunization Scheduler, மற்றும் உங்கள் குழந்தை வாரவாரம் எப்படி வளரும், என்னென்ன மாற்றங்கள் இந்த காலங்களில் நீங்கள் சந்திக்க வேண்டி வரும், இப்படியாக உங்களுக்கு தேவையான எல்லா தகவல்களும் உங்கள் அம்மாக்களுக்கு தெரியாத தகவலும் இதில் கிடைக்கும்.

இந்த வலை தல முகவரி: http://www.babycenter.com http://www.babycenter.in/


பிறகு இந்த ப்ளாக் http://ammakalinpathivukal.blogspot.com/

இதை பற்றி சொல்லவே தேவையில்லை, சென்று பாருங்கள்


அடுத்த பதிவு : கருவுற தம்பதிகள் செய்யவேண்டியன.....